



























Updated on:
சென்னை: தமிழக முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்றுக்கொண்ட விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு புதிய வரலாற்றை முதல்வர் ஜோசப் விஜய் படைத்திருக்கிறார். மகிழ்ச்சியாக இருக்கிறது. மேன்மேலும் அவர் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
ஓர் இளைஞர் ஆட்சிக்கு வந்திருக்கிறார். அவர் மக்களுக்கு நல்லது செய்வார் என 100 சதவீதம் நம்பிக்கை இருக்கிறது. அவர் மிகவும் கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்றிருக்கிறார்.
அவரது போராட்டத்துக்கு நிச்சயம் நல்லது நடக்கும். இதற்காக, தமிழக மக்களுக்கும், அவரது தோழமை கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。