惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

G
Google Developers Blog
D
Docker
Stack Overflow Blog
Stack Overflow Blog
GbyAI
GbyAI
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
Google DeepMind News
Google DeepMind News
M
MIT News - Artificial intelligence
H
Help Net Security
T
Tailwind CSS Blog
Engineering at Meta
Engineering at Meta
L
LangChain Blog
MongoDB | Blog
MongoDB | Blog
腾讯CDC
H
Hackread – Cybersecurity News, Data Breaches, AI and More
S
SegmentFault 最新的问题
博客园 - 司徒正美
C
Check Point Blog
B
Blog
Y
Y Combinator Blog
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
P
Proofpoint News Feed
F
Fortinet All Blogs
美团技术团队
D
DataBreaches.Net

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
“கனத்த இதயத்தோடு அதிமுகவில் இருந்து விலகுகிறேன்” - செம்மல...
வேட்டையன் · 2026-05-18 · via hindutamil

Updated on: 

சென்னை: அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகி உள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:

தேர்தலுக்கு பிறகு அஇஅதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில்தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.

நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே திருப்தி அளிப்பதாக இல்லை. மாறாக கவலை அளிப்பதாகவே உள்ளது. முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உருவாக்கிய இயக்கம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றிய இயக்கத்துக்கு இந்த கதியா?

‘கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா! நோகுதய்யா; மனசு நோகுதய்யா’ என்ற உள்மனதின் வெளிப்பாடு எல்லோருக்குமானதே ஆகும். “உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது” என்று பிரபல ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவுக்கு நிலைமை போய்விட்டது.

முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா, எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியலில் நிலையான ஓர் அங்கீகாரத்தை எனக்கு உருவாக்கித் தந்தார்கள். அந்த நன்றிக்காக மறைந்த அந்த ஆளுமை மிக்க இரு பெரும் தலைவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இந்த இயக்கத்துக்கு என் அனுபவம் பயன்படவேண்டும் என்று சுயநலமின்றி தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு எனக்கு பல வாய்ப்புகள் மறுக்கப்பட்டன, தடுக்கப்பட்டன. அதைப்பற்றி கூட நான் கவலைப்படவில்லை. எனது ஆதங்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் தலைமைக்கு கட்டுப்பட்டு தொடர்ந்து பணியாற்றி வந்தேன்.

மறைந்த ஆளுமை மிக்க இருபெரும் தலைவர்களுடன் அரசியலில் பயணித்ததை நான் ஒரு கணம் எண்ணிப் பார்க்கிறேன். இப்போது உருவாகியுள்ள சூழ்நிலைகளை பார்க்கிறபோது இயக்கத்தில் தொடர்ந்து பயணிக்க என் மனம் இடம் தரவில்லை. மனம் வேதனைப் படுகிறது.

எவ்வளவோ வாய்ப்புகளை எனக்கு வழங்கியதோடு அரசியல் வானில் அடையாளம் காட்டப்பட்ட ஒரு ஒளிரும் நட்சத்திரமாக என்னை ஆளாக்கி அழகு பார்த்த மறைந்த இரு பெரும் தலைவர்களின் ஆன்மாக்களிடம், நான் எடுத்த இந்த முடிவுக்கு மன்னிப்புக் கோரி கனத்த இதயத்தோடு நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தும், கட்சியிலிருந்தும் விலகிக்கொள்கிறேன் என்பதை தலைமைக்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று அதில் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்து செய்தியாளர்களை இன்று சந்தித்த முன்னாள் அமைச்சர் செம்மலை, “இதுவரை உங்களையெல்லாம் சந்திக்கின்ற போது மகிழ்ச்சியோடு சந்தித்தேன். ஆனால், இன்று மனவருத்தத்தோடு சந்திக்கின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடைபெறும் நிகழ்வுகள் எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. நடந்த, நடக்கும் சம்பவங்கள் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. எனக்கு கவலையை மட்டுமே அளிக்கிறது. இந்த இயக்கத்தை முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் எப்படி உருவாக்கினார்கள். அதை எப்படி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காப்பாற்றினார்கள் என்பதை நாடே அறியும். இரு பெரும் தலைவர்கள் வழிநடத்திய இந்த இயக்கம் இன்றைக்கு பலவீனமாகி விட்டதை பார்த்து லட்ச கணக்கான தொண்டர்கள் கவலை அடைந்துள்ளனர்.

கட்சி பலவீனமாகி கொண்டே போகிறது. அதை பலப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் இன்று கட்சியில் இருக்கின்ற தலைவர்கள், முக்கிய நிர்வாகிகளுக்கு இருக்க வேண்டும். ஆனால், இந்த இயக்கத்தில் உள்ள பிரச்சினை என்னவென்று சொன்னால் நிர்வாகிகளுக்கு இடையே இருக்கின்ற ‘ஈகோ’தான். அது வேகத்தடை போல கட்சியின் வளர்ச்சியை தடுக்கிறது. கட்சியை வளர்க்க வேண்டுமென்ற எண்ணம் இல்லை.

அதிமுகவை தவெக தலைவரும் முதல்வருமான விஜய் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. கட்சியை வலுவான இயக்கமாக காட்டத் தவறியதே இதற்கு காரணம். இதில் விஜய்யை குறை சொல்ல முடியாது.

தேர்தலில் கட்சியின் தோல்விக்கு பொதுச்செயலாளர் பழனிசாமி காரணம் என்ற குற்றச்சாட்டை ஏற்க மாட்டேன். அவர் தேர்தலின் போது கடுமையாக உழைத்தார். இருப்பினும் உட்கட்சி பூசல் காரணமாக வெற்றி பெற முடியவில்லை. அதேபோல எஸ்.பி.வேலுமணியின் பின்னால் பாஜக இருக்கிறது என்ற குற்றச்சாட்டை நான் ஏற்க மாட்டேன்” என்றார்.