





















Updated on:
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வரும் நடிகை தமன்னா, சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், தென்னிந்திய திரைத்துறையில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் குறித்துப் பேசியிருக்கிறார்.
அவர் கூறும்போது,"தென்னிந்திய சினிமாவில் பெண்களைப் பார்க்கும் பார்வையில் ஆணாதிக்க மனப் பான்மை இருப்பதை உணர்ந்தேன். அந்தப் பார்வை பெண்களைப் பாராட்டும் வகையில் இல்லை. அங்கு வணிக ரீதியாக வெற்றி பெற வேண்டுமென்றால் குறிப்பிட்ட ‘ஸ்டார்’ அந்தஸ்து அவசியம். அந்த வகையில் அங்கு பாலிவுட்டை விட அதிகமான கட்டுப்பாடுகள் இருக்கின்றன.
கவர்ச்சியையும், நடிப்புத் திறனையும் சமநிலைப் படுத்தும் நடிகைகளே அங்கு நீண்ட காலம் வெற்றிகரமாக நிலைத்திருக்க முடியும். இந்தி திரைத்துறையில் 2 வகையான நடிகைகள் உள்ளனர். கலைநயமிக்க அணுகு முறையைக் கொண்டவர்கள் குறிப்பிட்ட சில கதாபாத்திரங்களில் நடிக்கவே அதிகம் பொருந்துகிறார்கள்; அவர்கள் கட்டாயம் கவர்ச்சி பாடல்- நடனக் காட்சிகளில் நடிக்க வேண்டிய அவசியமில்லை. இதில் இருந்து மாறுபட்டவர்கள் மற்றொரு வகையினர்.
இவ்விரண்டில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குகிறது; ஆனால், இந்த இரண்டையும் சிறப்பாகச் செய்பவர்கள் தவிர்க்க முடியாமல் சூப்பர் ஸ்டார்களாக உயர்கிறார்கள். நடனப் பாடல்களை ‘ஐட்டம் பாடல்கள்’ என்று அழைப்பதை விரும்பவில்லை. அந்த வார்த்தை பெண்களை ஒரு பொருளாகக் காட்டுவதால், ‘பார்ட்டி பாடல்கள்’ என்று அழைப் பதையே விரும்புகிறேன். இவ்வாறு தமன்னா தெரிவித்துள்ளார்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。