惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

aimingoo的专栏
aimingoo的专栏
I
InfoQ
B
Blog RSS Feed
D
Docker
GbyAI
GbyAI
N
Netflix TechBlog - Medium
Y
Y Combinator Blog
F
Fortinet All Blogs
P
Proofpoint News Feed
Microsoft Azure Blog
Microsoft Azure Blog
人人都是产品经理
人人都是产品经理
Martin Fowler
Martin Fowler
OSCHINA 社区最新新闻
OSCHINA 社区最新新闻
M
MIT News - Artificial intelligence
C
Check Point Blog
Vercel News
Vercel News
云风的 BLOG
云风的 BLOG
博客园 - Franky
Google DeepMind News
Google DeepMind News
WordPress大学
WordPress大学
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
V
V2EX
Last Week in AI
Last Week in AI
L
LangChain Blog

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
செலவை குறைக்கும் நிழல் வலை நாற்றங்கால் சாகுபடி - கும்பகோண...
2026-04-25 · via hindutamil

ஏராகம் கிராமத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிழல் வலை நாற்றங்கால் | விவசாயி சாமிநாதன்

Updated on

1 min read

கும்பகோணம் வட்டம் ஏராகரத்தில் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்துள்ள செலவை சமாளிக்கும் நோக்கில், முதன்முறையாக நிழல் வலை நாற்றங்கால் முறையில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கும்பகோணம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் வாழை, கரும்பு போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டாலும், பிரதானமாக நெல் சாகுபடியையே பெரும்பாலான விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக் காலங்களில் கூலி தொழிலாளர்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு, நீர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் விவசாய பணிகள் சிரமமாகி வருகின்றன. பல தொழிலாளர்கள் வெளிமாநிலங்கள் மற்றும் மாற்று வேலைகளுக்கு செல்லும் நிலை உருவாகியுள்ளதால், விவசாயத்துக்கு ஆட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.

இதனால், விவசாயிகள் நடவு மற்றும் அறுவடைக்கு இயந்திரங்களை பயன்படுத்தி வந்தாலும், அதற்கும் தொழிலாளர் தேவை இருப்பதால் சிரமம் நீடித்து வருகிறது.

இந்நிலையில், ஏராகரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சாமிநாதன், பச்சை நிறத்தாலான நிழல் வலை நாற்றங்கால் அமைத்து நெல் சாகுபடி செய்யும் புதிய முயற்சியை தொடங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறியது: விவசாய தொழிலாளர்கள் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கூலி உயர்வு காரணமாக விவசாய செலவுகள் அதிகரித்து வருகின்றன. இதற்கான மாற்றாக நிழல் வலை நாற்றங்கால் முறையை பயன்படுத்தி வருகிறேன்.

ஏக்கருக்கு 30 மீட்டர் நீளம், 1.5 மீட்டர் அகலத்தில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான பச்சை நிற நிழல் வலை வாங்கி, நாற்றங்காலை தயார் செய்த பின் அதன் மேல் விரித்து, மண் தூவி விதை தெளித்து மீண்டும் வலை மூலம் மூடப்படுகிறது.

7 நாட்களில் முளைத்து, 17 நாட்களில் நாற்றுகளை எடுத்து நடவு செய்யலாம். இந்த முறையில், நாற்றுகளை வேருடன் எளிதாக எடுக்க முடிவதால் நாற்று பறிப்பதற்கான தொழிலாளர் தேவை இல்லை. இதனால் ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வரை செலவு மிச்சமாகிறது.

மேலும், குறைந்த அளவு நீர் போதுமானதாக இருப்பதுடன், நாற்றுகள் வலுவாக வளர்ந்து முளைப்புத்திறன் அதிகரிப்பதால் விளைச்சலும் கூடுகிறது. மழை பெய்தாலும் விதைகள் நீரில் செல்லாமல் பாதுகாக்கப்படுகின்றன.

பொதுவாக ஏக்கருக்கு 20 கிலோ முதல் 30 கிலோ விதை தேவைப்படும் நிலையில், இந்த முறையில் 5 கிலோ விதை போதுமானது. இதனால், விதை செலவு, தொழிலாளர் செலவு, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றில் மொத்தமாக ரூ.7 ஆயிரம் வரை மிச்சமாகும். குறைந்த செலவில் அதிக லாபம் தரும் இந்த முறையை மற்ற விவசாயிகளும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.