惯性聚合 高效追踪和阅读你感兴趣的博客、新闻、科技资讯
阅读原文 在惯性聚合中打开

推荐订阅源

雷峰网
雷峰网
B
Blog
博客园_首页
云风的 BLOG
云风的 BLOG
S
SegmentFault 最新的问题
罗磊的独立博客
Jina AI
Jina AI
C
Check Point Blog
Martin Fowler
Martin Fowler
J
Java Code Geeks
博客园 - 司徒正美
美团技术团队
MongoDB | Blog
MongoDB | Blog
钛媒体:引领未来商业与生活新知
钛媒体:引领未来商业与生活新知
奇客Solidot–传递最新科技情报
奇客Solidot–传递最新科技情报
大猫的无限游戏
大猫的无限游戏
有赞技术团队
有赞技术团队
U
Unit 42
Hugging Face - Blog
Hugging Face - Blog
WordPress大学
WordPress大学
让小产品的独立变现更简单 - ezindie.com
让小产品的独立变现更简单 - ezindie.com
博客园 - 叶小钗
博客园 - 三生石上(FineUI控件)
小众软件
小众软件

hindutamil

பல்லாவரம்: பம்பரமாய் சுழன்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு ‘ஜனநாயகன்’ வெளியானதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை: முதல்வர் ஸ்டாலின் சைதாப்பேட்டை: பிச்சாரத்தில் தீவிரம் காட்டும் கட்சிகள் ஒரே விமானத்தில் செல்ல இருந்த பழனிசாமி, உதயநிதி: கடைசி நேரத்தில் திடீர் மாற்றம் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் 3 வார்டுகளின் வாக்குச்சாவடிகள் பதற்றம்: தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார் “பந்துவீச்சாளரை பார்ப்பது இல்லை; பந்துகளையே பார்க்கிறேன்” - வைபவ் சூர்யவன்ஷி உற்சாகம் பிரியன்ஷ் ஆர்​யா, பிரப்​சிம்​ரன், ஸ்ரேயஸ் விளாசல்: ஹைதராபாத்தை வீழ்த்​தி​யது பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி: டெல்லி கேப்​பிடல்ஸை வீழ்த்​தி​யது எப்படி? ஈரானின் மோஜ்தபா முகம் சிதைந்து பலத்த காயம்: ஒரு கால் துண்டிக்கப்பட்டதாக அமெரிக்கா தகவல் பூமிக்கு பத்திரமாகத் திரும்பிய 4 விண்வெளி வீரர்கள்: ஆர்​டெமிஸ்-2 நிலவு பயணம் வெற்றி கடல் கண்ணி வெடிகளைக் கண்டுபிடிக்க முடியாததால் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் சிக்கல் நீடிப்பு “விலைவாசி உயர்வுதான் ஸ்டாலின் அரசின் பெரிய சாதனை” - நடிகை கவுதமி குற்றச்சாட்டு யுபிஐ மூலம் ரூ.10,000-க்கு மேல் அனுப்பினால் 1 மணி நேரத்துக்கு பின்பே செல்லும் சென்னை: பால்கனியில் இருந்து விழுந்த ஆட்டோ ஓட்டுநர் உயிரிழப்பு திருவள்ளூரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 கோடி நகைகள் பறிமுதல் சென்னை: சிக்கன் பக்கோடா தர மறுத்த வியாபாரி மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியவர் கைது ‘களை’ எடுத்து விட்டேன்... களத்தில் வெற்றி நிச்சயம்! - இபிஎஸ் உடன் ஓர் இயல்பான நேர்காணல் கர்நாடக மலையில் காணாமல் போன கேரள சிறுமி 4 நாட்களுக்கு பின் சடலமாக மீட்பு தவெக பிரச்சார வாகனத்தின் மீது கல்வீச்சு: திமுக நிர்வாகிகள் மூவர் மீது வழக்குப் பதிவு சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில் இன்று 20 ரயில்களின் சேவையில் மாற்றம் மகாத்மா ஜோதிபா புலே 200-வது பிறந்த நாள்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி இடையே சுமுக உரையாடல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா விவகாரம்: எதிர்க்கட்சிகள் 15-ம் தேதி ஆலோசனை கெட்ட வார்த்தைகளைப் பேசினால் ரூ.500 அபராதம் விதிக்கும் ம.பி. கிராமம் கோடையைக் குளுமையாக்கிய ஆச்சியின் அன்பு | புதிய வானம் புதிய பூமி ஆரோக்கியமான போட்டி | வாசிப்பை நேசிப்போம் பிடித்தவருடன் வாழ்வது பெண்ணின் உரிமை | பெண்கள் 360 மூட்டை முடிச்சுகளுடன் ஊடுருவல்காரர்கள் தயாராக இருங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி தகவல் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன் சடலமாக மீட்பு இப்படியும் சொல்லலாம் நன்றி! | ஆண்கள் ஸ்பெஷல் 12 மாநிலங்களில் 6 கோடி வாக்காளர்கள் நீக்கம்
தேர்தலில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட அதிமுக: தொடர்ந்து இரும...
2026-05-05 · via hindutamil

Updated on

2 min read

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தொடர்ந்து 2 முறை அதி​முக தோற்​றதே இல்​லை. ஆனால் இம்​முறை வெற்றி வாய்ப்பை தவற​விட்​டிருப்​பது அதி​முக தொண்​டர்​கள் மத்​தி​யில் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.

அதி​முக​வின் 54 ஆண்​டு​கால வரலாற்​றில் 30 ஆண்​டு​களுக்கு மேல் ஆட்​சி​யில் இருந்​துள்​ளது. தமிழகத்​தில் அடுத்​தடுத்த தேர்​தல்​களில் வென்ற ஒரே கட்​சி, தொடர்ந்து 3 முறை வென்று ஆட்​சி​யில் தொடர்ந்த கட்​சி, எம்​ஜிஆர் உயிரோடு இருக்​கும்​வரை தோல்​வியையே கண்​டி​ராத கட்சி என்ற சாதனை​களை அதி​முக படைத்​திருக்​கிறது. மேலும், இக்​கட்சி இது​வரை தொடர்ந்து 2 முறை தோற்​காத அளவுக்கு எம்​ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலை​வர்​களும் கட்​சியை நடத்தி வந்​தனர்.

இதை தக்​கவைக்க வேண்​டிய மிகப் பெரிய கடமை​யும் பொறுப்​பும் பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமிக்கு இருந்​தது. அதை மனதில் வைத்து கட்​சியை வழிநடத்தி வந்​தார். ஆனால், கடந்த 2019-ம் ஆண்டு நடை​பெற்ற மக்​கள​வைத் தேர்​தல் தொடங்​கி, பல்​வேறு தேர்​தல்​கள் அதி​முக​வுக்கு தொடர்ந்து தோல்வி முக​மாக இருந்து வரு​கிறது. இத்​தோல்விக்கு பாஜக கூட்​டணி காரணம் என கூறப்​பட்டு வந்த நிலை​யில், 2024 மக்​களவை தேர்​தலில் பாஜக​வுடன் கூட்​டணிவைக்​காமல் போட்​டி​யிட்​டும் ஒரு இடத்​தில்​கூட வெற்றி பெற​முடிய​வில்​லை.

இந்த இக்​கட்​டான சூழலில், 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் வெற்​றி​பெற்றே ஆக வேண்​டிய கட்​டா​யத்​தில் பழனி​சாமி இருந்​தார். இதற்​காக வியூக வகுப்​பாளர்​களை நியமித்​து, பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்​டார். கடந்த ஆண்டு ஜூலை மாதமே தேர்​தல் பிரச்​சா​ரத்தை தொடங்​கி​னார். கடந்த மார்ச் 15-ம் தேதி தேர்​தல் அறி​விப்பு வெளி​யாகும்​போது, கிட்​டத்​தட்ட 170 தொகு​தி​களுக்கு மேல் பிரச்​சா​ரத்தை முடித்​திருந்​தார்.

எந்த தேர்​தலிலும் இல்​லாத வகை​யில் புது வகை​யாக, பிரச்​சா​ரத்​தின்​போதே பகுதி பகு​தி​யாக தேர்​தல் வாக்​குறு​தி​களை அறி​வித்​தும் வந்​தார். அவரைப் போன்று வேறு எந்த கட்​சித் தலை​வரும் இந்த அளவுக்கு தீவிர பிரச்​சா​ரத்தை மேற்​கொள்​ள​வில்​லை. இருப்​பினும் இந்த தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணிக்கு மூன்​றாம் இடமே கிடைத்​தது.

இந்த தேர்​தலில் அதி​முக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக-வுக்கு 27 தொகு​தி​கள், பாமக​வுக்கு 18 தொகு​தி​கள், அமமுக-வுக்கு 11 தொகு​தி​கள், தமிழ் மாநில காங்​கிரஸுக்கு 5 தொகு​தி​கள் ஒதுக்​கப்​பட்​டன. அதி​முக 169 தொகு​தி​களில் போட்​டி​யிட்​டது. சசிகலா, டிடிவி தினகரன்,

ஓ.பன்​னீர்​செல்​வம் ஆகியோரை கட்​சி​யில் இணைக்க வேண்​டும் என்று அதி​முக​வின் மூத்த தலை​வ​ராக இருந்த செங்​கோட்​டையன் தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தார். ஆனால் அவரது கோரிக்​கையை ஏற்​காத பழனி​சாமி, கட்​சியி​லிருந்து செங்​கோட்​டையனை நீக்​கி​னார். கட்சி ஒருங்​கிணைப்புக்கு சாத்​தி​யமில்லை என்​ப​தில் பழனி​சாமி பிடி​வாத​மாக இருந்​தார்.

பாஜக​வின் முன்​னெடுப்​பால் டிடிவி தினகரனை மட்​டும் ஏற்​றுக்​கொண்​டார். ஓபிஎஸ், ஆர்​.​வைத்​திலிங்​கம், மனோஜ் பாண்​டியன் ஆகியோர் திமுக​வில் ஐக்​கிய​மா​யினர். அதே​நேரம், கூட்​ட​ணிக்​குள் பாமகவை கொண்​டு​வந்த பழனி​சாமியால் பாமக​வில் அன்​புமணி - ராம​தாஸ் இடையே நில​விய பிளவை சரிசெய்ய முடிய​வில்லை.

தேமு​திகவை கூட்​ட​ணி​க்குள் கொண்டுவருவதையும் தவற​விட்​டது. முதற்​கட்​ட​மாக பழனி​சாமி அறி​வித்த வேட்​பாளர் பட்​டியலில் 23 பேர் இடம்​பெற்​றிருந்​தனர். இவர்​களில் பெரும்​பாலானோர் தெற்​கில், கொங்கு மண்​டலத்​தில் மற்​றும் வட மாவட்​டங்​களில் வலு​வாக இருக்​கும் முக்​கிய சமூகத்​தின​ராகவே இருந்​தனர்.

ஜெயலலிதா காலத்​தில், அதிக அளவில் மாநக​ராட்சி மாமன்ற உறுப்​பினர்​கள், ஒன்​றிய செய​லா​ளர்​களுக்கு வாய்ப்பு வழங்​கப்​பட்​டது போன்று இப்​போது வழங்​காததும், தொண்​டர்​கள் மத்​தி​யில் அதிருப்​தியை ஏற்​படுத்​தி​யது.

இத்​தகைய காரணங்​களாலேயே இந்​தத் தேர்​தலில் அதி​முக வெற்றி வாய்ப்பை இழந்​ததோடு, அக்​கூட்​டணி 3-ம் இடத்​துக்கு செல்​லும்​ நிலை ஏற்​பட்​டு​விட்​ட​தாக அதி​முக வட்​டாரங்​கள்​ தெரிவிக்​கின்​றன.