





















Updated on
:
1 min read
ஒய்.ஜி.மகேந்திரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம், ‘சாருகேசி’. இதில் சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அருண். ஆர் தயாரித்துள்ள இந்தப் படத்தை, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள், வசனம் பா. விஜய். தேவா இசையமைத்துள்ளார்.
இ5 என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் ஜே. ஜெயகிருஷ்ணன் வெளியிடுகிறார். ஒய்.ஜி.மகேந்திரா இதே பெயரில் நடத்திய நாடகத்தைத் திரைப்படமாக்கி உள்ளனர்.
“இப்படம், செவ்வியல் இசை, உறவுகள், மனித உணர்வுகள் மற்றும் கலைப் பாரம்பரியத்தின் சாராம்சத்தை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
வலுவான இசை அடித்தளம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதைசொல்லல் காரணமாக, இதை சங்கராபரணம், சிந்து பைரவி போன்ற படங்களின் வரிசையில் சேர்க்கலாம்” என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
此内容由惯性聚合(RSS阅读器)自动聚合整理,仅供阅读参考。 原文来自 — 版权归原作者所有。